சிகரம்
எவரெஸ்ட் எட்டியவர் சாதாரணம்
என்றும் சிகரத்துக்கு உதாரணம்
த.பால்தங்கம் – சென்னை
உழைப்பால் உயர்வோம் தொடுவோம் சிகரம்
தடைகள் யாவும் தகர்க்கும் அகரம்
கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி
சிகரம் தாண்டி கல்வியறிவை வளர்ப்போம்!
வீரத்துடன் வெற்றி நடை போடுவோம்!
த.சுகுணா – மதுரை
ஆரம்பம் அகரம்…
அடைவது சிகரம்…
இடையில் வரும் தடைகள் விடாமுயற்சியில் தகரும்.
சு.க.சீ லிட்டில் பாரதியார் – கள்ளக்குறிச்சி
இவ்வுலகில் உயர்ந்த மிக பெரிய சிகரம்…..
உன்னுடைய உழைப்பு
கு. கோகிலா – விழுப்புரம்
துணிந்து நின்றால் அது உனது நகரம்,
தடைகளைத் தகர்த்து தொடுவோம் சிகரம்!
தேவி க – சென்னை
உள்ளத்தில் நம்பிக்கையோடு தேடு
சிறு குன்றே ஆகும் சிகரம்.
சுந்தர் சுவாமிநாதன் – திருநெல்வேலி
இருள் விலகும் என்ற நம்பிக்கை இருந்தால் தொடலாம் சிகரம் !
இதயம் தளராத பயணத்தில் இமயமும் ஆகும் சரணம்!
சி. கிருஷ்ணவேணி – தருமபுரி
நம்பிக்கையின் சிகரத்தோடு உழைத்திடு
நாளைய தலைமுறைக்கு வழிகாட்டு

