புலரி

இரவின் கண்ணீரைத் துடைத்து, புன்னகையோடு ஒளிர்கிறது அதிகாலை!

கோ கே. ஏழுமலை – கள்ளக்குறிச்சி

நடப்பது நடந்தே தீரும் மாற்ற முடியாது.

த.பால் தங்கம் – சென்னை

கரிய இருள் நீங்கி கடமைகள் செய்ய காத்திருக்கின்றன கதிரவன் வரவை நோக்கி

பெ. சுஜித் – கள்ளக்குறிச்சி

இருளை விரட்டி அருளைத் திரட்டும் சூரியனின் துவக்கக் கையெழுத்து!

சி. கிருஷ்ணவேணி – தருமபுரி

பனித்துளி சுமக்கும் புல்லிதழில் பொன்னொளி – புலரி

மாணிக்கவாசகம் நாகேசுவரன் – வடலூர்

இருண்ட வானில் வெளிச்சம் பிறக்கும் அந்நேரம்.

கு. கோகிலா – விழுப்புரம்

வைகறையில் வாகை சூடி வலம் வரும் சுடரி

சி.கனகலெட்சுமி – கோயம்புத்தூர்

இருளின் மடியில் பிறக்கும் ஒளி, இயற்கை எழுதும் நம்பிக்கையின் மொழி!

ரா. ஸ்ரீநிதி – சிவகங்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top