திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை
அக்னி சாட்சியாய் இரு கரங்கள் கோர்த்து,
இரு ஆன்மாக்கள் ஒன்றிணைந்த உன்னதத் திருநாள் இன்று!
இன்ப துன்பங்களின் நெடும் பயணத்தில்,
ஒருவரையொருவர் தாங்கி நிற்கும் பேரன்பின் காவியம் உங்கள் வாழ்க்கை.
வார்த்தைகள் தேவையில்லா புரிதலோடும்,
வற்றிப்போகாத விட்டுகொடுத்தலோடும்,
இல்லறப் பாதையில் நீங்கள் பதித்த சுவடுகள் யாவும்
அன்பின் ஆகச்சிறந்த இலக்கணம்!
“ஆயுள் முழுக்கத் தொடரும் இந்த அழகிய பயணத்தில்,
உங்கள் பாசப் பிணைப்பு என்றும் குறையாதிருக்கட்டும்!”
நெஞ்சாற வாழ்த்துகிறோம் உங்கள் இணைபிரியா காதலை!
நூறாண்டு காலம் ஆரோக்கியத்தோடும், அழியாப் புகழோடும்,
மகிழ்ச்சி பொங்க நீங்கள் தம்பதியராய் பல்லாண்டு வாழ்க!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்!

