இயற்கை ஹைக்கூ கவிதைகள்
வான்மழை
அனைவரும் அழைக்கிறார்கள் ஆர்ப்பரித்து அளிக்கிறேன்
அவர்களை வேண்டி விரட்டுகிறார்கள் விடைபெற
வான்மழை
காற்றில் கீற்றுகள்
உறக்கம் கலைத்து நூறு விரல்களால்
இசையை மீட்டி இன்ப நடனம் ஆடுகிறது
காற்றில் கீற்றுகள்
உயிர் காற்றே
பிரிந்து போய் விடாதே
இறந்து போய் விடுவேன்
உணரும் உன்னை உயிராக கொண்டேன்
உயிர் காற்றே
பாயும் நதிகள்
வானை திறந்து மலையில் விழுவாய்
மலையை தழுவி புவியில் படர்வாய்
புவியை குளிர்த்து கடலிலகரைவாய்
பாயும் நதிகள்
ஈசல் கூட்டங்களே
எங்கே போகிறீர்கள் கனவுகள் கலைக்கப்படும்
சிறகுகள் உடைக்கப்படும் உயிர்கள் பிரிக்கப்படும்
எங்கே போகிறீர்கள்
ஈசல் கூட்டங்களே