நினைவுகளும் கவிதைகளும்
கண்டபடி
கோபத்தில்
கத்திவிட்டு
பிரிவதை விட,
அன்பான
பிரிதல்கள்
ஏராளமான
வலியைத்
தரும்.!
மறக்கவும்
முடியாத,
மறுக்கவும்
முடியாத
கடைசி
சந்திப்பில்,
"உன்
டைரியை
நான் வச்சிக்கிறேன்டா,
ப்ளீஸ்டா.
எப்போதும்
எனக்கு
அவை,
என் உயிரை
திருப்பித்
தரும்..
சரி.
எங்கோ
தொலைக்கவில்லை..
தொலைக்கவும்
முடியவில்லை..
டைரிகள்
நினைவுகளுக்கானது
மட்டுமில்லை.
அவை
கவிதைகளுக்கானதும்
கூட..
நினைவுகளையல்ல,
கவிதைகளை
மட்டும்
உன்னிடமே..
ஆனாலும்,
நான்
உன்னிடம்
இழந்தது,
என் டைரியை
மட்டுமா..
இந்தக்
கவிதை தலைப்பின்
இரண்டாம் பாதியையும் கூட..