தீபாவளி
எப்பவுமே
என்னுடன் சண்டை போடும் தோழி,
நேற்றிரவு என்னுடன் செல்போனில் பேசிக் கொண்டே 9 மணிக்கே தூங்கி விட்டாள்.
அப்பாடா...
இன்னிக்கு தப்பிச்சோம்,
தீபாவளியை முன்னிட்டு, சண்டைக்கு விடுமுறை விட்டுவிட்டாள் என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
9:03க்கு ஃபோன் காலை கட் செய்து விட்டு தூங்கி விட்டேன்.
சரியாக 9:30
கனவில் ஒரு இனிமையான பாடல் ஒலித்தது.
"நேத்து...
தனிமையில போச்சு...
யாரும் தொணை இல்ல..."
விடாப்பிடியாக இரண்டாம் முறை பாடல் ஒலித்த போது தான் தெரிந்தது,
அது கனவில்லை...
என் செல்போன் ரிங்டோன்.
வேறு யாருமில்லை,
தூங்கி விட்டதாக நினைத்து கொண்ட என் தோழி தான்.
"ஒரு 10 வினாடி, கண் அசந்துட்டா, ஃபோன் வச்சிட்டு போய்டுவியா?."
திட்டுவதை ஆரம்பித்தாள்.
அதானே...
இவளுக்கு,
என்னை திட்டுவதை நிறுத்தி விட்டால், தூக்கம் வராதே...
"10 வினாடியா...?.
அரை மணி நேரம் ஆகிடுச்சுடீ..."
என்றேன்.
ம்ஹூம்...
அவள் விடவேவில்லை...
சரிதான்... இன்றைக்கு சண்டை போட அவளுக்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது.
தோழிகளே....
ஃபோனில்
சண்டை போடுங்கள்...
திட்டுங்கள்..
ஏற்றுக்கொள்கிறோம்.
ஃபோன் பேசும் போது,
நீங்கள் தூங்கிவிட்டால்,
திரும்ப நீங்கள்
விழிக்கும் வரை,
எங்களை ஃபோன் லைனிலேயே காத்திருக்கச் சொல்வது
எந்த விதத்திலும்
நியாயமே இல்லை.
"உனக்கு தீபாவளி ஸ்பெஷல் திட்டு.. நாளைக்கு இருக்கு... வாங்கிக்கோ...",
என்றாள், அல்லது பயமுறுத்தினாள்.
"போடி...
நான் நாளைக்கு மௌன விரதம்..."
"ஏன்"
"Mr.கிருஷ்ணன் என்பவர்,
நரகாசுரன் என்பவரை படுகொலை செய்த தினம் இன்று... அதனால் தான்..", என்றேன்.
எனவே,
மக்களே....
நரகாசுரன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திரு.கவிதைக்காரன் அவர்கள் மௌனவிரதம் என்பதால்,
யாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்...!
(ஒரு வேளை, தீபாவளி அன்று, எனக்கு இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால்,
நரகாசுரனே, மனம் திருந்தி நல்லவனாக வாழ்ந்திருப்பான். கிருஷ்ணர் அவனை கொல்ல வேண்டிய அவசியமில்லை. தீபாவளியை முன்னிட்டு நானும் திட்டு வாங்கியிருக்க மாட்டேன்...)
-கவிதைக்காரன்.