அவிழ்க்க முடியாத முடிச்சு-3
இணைந்த
அல்லது
இணையாத
தண்டவாளங்கள்தான்
நட்பு.
அதுவும்,
ஆண்-பெண் நட்பில்
இம்சை தான்
யார் விழுந்தாலும்.
வாங்க...
போங்க...
என்று
மரியாதையாக
பேசும் தோழி,
"என்னடா பண்ற",
என்றாள்,
வெகு திடீரென.
என்னது,
"டா"வா?.
என்னதான்
தோழன்-தோழி
என்றாலும்,
மரியாதையாவே
பேசிக்கலாம்ங்க
என்றேன்.
"அப்படி
மரியாதையோட
பேசுனா,
அது
நட்பே இல்ல...".
ஹா..
நாம,
எப்படி மடக்கினாலும்
எளிதாகத்
தப்பித்து விடுகிறாளே...
நான்
'டா'னு தான்
சொல்லுவேன்.
நீ
வேணும்னா,
'டி', சொல்லிக்கோ
என்றாள்
அராஜகமாக.
அடுத்த நாள்.
என்னடா,
ஃபீல் பண்றியா..?.
நீ
கோவிச்சிக்கிட்டாலும்
பரவால்ல,
நான்,
உன்னை 'டா'னுதான்
சொல்லுவேன்,
என்றாள்,
மிகக் கேலியாக.
திரும்பத் திரும்ப
சொன்னால் போரடிக்கும்,
இருந்தாலும் சொல்கிறேன்,
'அவிழ்க்கவே
முடியாத முடிச்சை
அவிழ்ப்பது
சுவாரஸ்யம்
எனில்
அப்படி
ஒரு முடிச்சைப் போடுவது,
அதைவிட
சுவரஸ்யமானது.'
சரிங்க.
ஆனால்,
டா என்றால்,
டார்லிங்க் என்று
அர்த்தமாம்.
டி என்றால்,
டியர் என்று
அர்த்தமாம்.
காலையில், டிவி ல
சொன்னாங்க.
எங்க.
இப்ப
கூப்பிடு பாக்கலாம்,
'வாடா'னு.
வச்சோம்ல
ச்ச்செக்கு..
-கவிதைக்காரன்.