அன்பு மழை
சில நேரங்களில்
சண்டைகள் என்பவை
சரளமான அன்புகள்...
பல நேரங்களில்
சண்டைகள் என்பவை
எதிர்கால அன்புகள்...
எனவேதான்,
ஆண்களை விட,
பெண்கள்தான் அதிகமாக
சண்டை போடுகிறார்கள்...
ஏனெனில்,
பெண்களுக்குத்தான்,
சண்டை போட,
காரணங்களே தேவை இல்லை..
இன்று ஒரு அப்பாவி பையன்,
கவிதை எழுதினான்,
"அன்பும் மழையும்,
இரண்டுமே ஒன்று.
அதிகமானாலும்
இம்சைதான்... இல்லையென்றாலும்..."
"அப்ப நான் உனக்கு இம்சையா..?,
நானும்தான்
உன் மேல அதிகமா அன்பு
வச்சிருக்கேன்.."
என்று சண்டைக்கு வந்தாள்,
என் அன்புக்காரி..
நான்தான்,
உங்களிடம்
ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே, இக்கவிதையின் இரண்டாவது பாராவை...
ஆனால்,
கவிதையின் மூன்றாவது பராவில் வரும் அப்பாவி பையன்,
வேறு யாரும் இல்லை...
அது நான் தான்...
"எப்பவுமே பேசறதாலதானே,
என் அன்பு உனக்கு
தொல்லையா தெரியுது...?
இனிமே நான் உன்கூட பேசறதை
குறைச்சிக்கலாம்னு இருக்கேன்..",
என்றாள்.
இதென்ன வம்பு..
ஒரு கவிதை எழுதுனது
குத்தமா...?.
"சரி குறைச்சிக்கோ...",
என்றேன்.
"நிஜமாவா...",
என்றாள் சந்தேகமாக.
"நிஜமாகத்தான்,
இனிமே
இவ்வளவு நேரம்
நீ பேச வேண்டாம்...
ஒரு
பத்து வினாடி
குறைச்சிக்கோ...!"
கவிதைக்காரன்