உன் நினைவுகளோடு
எழுது என்றவுடன்
என்னுடன் என்
பேனாவும் தயாராகிவிட்டது
பெயர் இல்லாத
உறவுக்காக
எங்கோ அன்பு எனக்கு
மீதம் வைக்கப்பட்டிருக்கிறது
உன் அறிமுகத்தால்
தினமும் உன்னை பற்றி
என் நினைவுகள் கேட்கும்
கேள்விகளுக்கு
பதில்
கூற முடியாமல் தவிக்கிறது என்
இதயம்
வேறொன்றும் இல்லை
எப்போது
உங்கள் காதல் சந்திப்பு என்று
காத்திருந்தால் காதல் கூடும்
என்று சொல்லி
நகர்ந்து விட்டேன்
சிரித்துக் கொண்டே
நீ சிந்தும் கண்ணீருக்கு
உன் கண்கள் என்ன
பதில் சொல்ல போகிறது
என்றது
அது நினைத்து நினைத்து
உருகி தான் போய்விட்டது
நாட்கள் தீர்ந்து கொண்டே
இருக்கிறது நான்
இன்னும் உன் நினைவுகளோடு
உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
-சிநேகிதி