தலையணை
கருமையின் இருளில் கண்ணீர்துளிகளால் கணத்து கிடக்கிறது தலையணை.
கண்ணீர்
நீ இல்லையென்பதை கன்னத்தில் முத்தமிட்டு சொல்கிறது கண்ணீர்
மௌனமொழி
உன் மௌனமொழியை விட என்னை அதிகம் கொள்வதில்லை கருவிழியில் நிரம்பிநிற்கும் கண்ணீர்த்துளிகள்.
உன்னை காணாது
உன்னை காணாது கலங்கிநிற்கும் விழிகளுக்கு தெரியாது நீ விலகிசென்றாய் என்று.
உன்னை காணாது
பசும்புல்லின் மீதேறிய பனித்துளியைப்போல மிளிர்கிறது அவளின் கன்னத்தில் வண்ணமிட்டு இருக்கும் வண்ணத்துளி.