காதல் பயணம்
கண்களால் கதைத்த காலங்களும் இல்லை
அருகில் அமர்ந்து பேசிய நாட்களும் இல்லை
அழகுமொழியை வர்ணித்த நிமிடங்களும் இல்லை
வசீகர வனப்பில் விளைந்த காதலும் இல்லை
ஒன்றுபட்ட கொள்கையினால் உருவான காதலா
என்றும் தெரியவில்லை
விவாதங்களினால் சரணடைந்த இதயங்களுடன்
சேர்ந்து பயணிக்கும் பயண நாட்களை எண்ணியவரே
நகர்ந்து கொண்டிறுகிறது காதல் பயணம்