பெண்மையே
பெண்ணே.....
உன்னை அடிமைப்படுத்தான் எத்தனை குரல்கள்
நீ அழகியென வர்ணிக்கும் மொழிகளும்
சமையல்அறையே உன் ராஜ்ஜியம்மென
அழகுமொழி பேசும் பெண்மையும்
என்னடி!
உடையென உடைஅதிகாரம் செய்யும் உறவுகளும்
பெண் படித்து என்ன செய்ய போகிறாள் என்ற ஊரார் பேச்சும்
ஆயிரம் காலத்து பயிர் என்ற
அறிய வயதின் ஆழ்கடல் நீச்சலும்
அங்கு செல்லாதே இங்கு செல்லாதே
என்ற அடக்கும் குரல்களும்
உன் அடிமைசங்கிலியை உடைத்து நீ புறப்பட
ஆணுலகத்தையும் நம்பாதே
பெண்ணுலகத்தையும் நம்பாதே
உனக்கான உலகத்தை உருவாக்கிகொள் பெண்மையே.