Dream-love failure kavithai
கனவு
கனவு காணும் நேரத்தில் பேசியது கனவாகவே இருந்திருக்கலாம்
என் கனவும் அவளின் நிஜமும்
ஒரு நாள் இரவில் பேசியதோடு முடிந்தது
இருபத்தி ஆறு ஆண்டுகள் அவள் பேசவில்லை
இந்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு
ஏன் இவ்வளவு மனப்போராட்டம்
இனியும் அந்த இரவு உரையாடல் நடக்கும்
என்ற எண்ணம் ஏக்கமாக மாறியது
என் இனியவள் பேச நினைக்கும் பொழுது
பேசட்டும் இனி இடையூறு செய்வதாக இல்லை.