என் தோழி
தோழியே தோழமையே தொடங்கிய நம் நட்பு
தொலைவில் நீ இருந்தாலும் தொலைந்து தான் போகலையே
அன்பியே அருந்தகையே ஆருயிர் என் உறவே
ஆண்டுகள் கடந்தாலும் அன்பு இன்னும் மாறலையே
கள்ளியே குறும்பியே வாய் பேசும் பைங்கிளியே
கதை பேசி நீயிருக்க கரையும் நேரம் தெரியலையே
திமிரே தலைகனமே வசை பாடும் வஞ்சியே
வார்த்தையால் வதைத்தாலும் விலகி நீ போகலையே
அடித்வளே அணைத்தவளே அடிக்கடி பொய் சொன்னவளே
ஆயிரம் பேர் கோள் சொல்ல எதையும் நம்பாதவளே
சிரிப்பாயே முறைப்பாயே முறை இல்லா பந்தமே
முறைகேடு நான் செய்ய கூட்டு துணை நிற்பாயே
ஆறுதலே ஆனந்தமே ஆசை பல தீர்த்தவளே
பணமோ பாசமோ குறையொன்றும் வைக்கலையே
துணையே இணையே எதிர் பாரா சொந்தமே
பழகிய காலம் முதல்இனம் மதம் பார்க்கலையே
-பிபி