ஒரு வரி அம்மா கவிதை
மறுபிறவி

மழலைமொழியில் மகிழ்ந்திட மரணவலியோடு மறுபிறவியெடுத்த மங்கை
அன்னை

அன்போடு அரவணைத்து அனுதினமும் ஆசிர்வதிக்கும் அன்னை
உறைவிடம்

ஊக்குவிக்கும் ஊக்கமருந்தின் உறைவிடம் உள்ளமே உனதிடம்மா
தனிமை

தவிக்கும் தனிமையின் தத்தளிப்பில் தாலாட்டும் தாய்
உயிர்

உதிரவெள்ளத்தில் உயிர்க்கொடுத்து உலகறியசெய்த உன்னத உறவு