Mazhai tamil kavithai
கனமழை
கருமேகத்துடன் காதல்கொண்டு கனமழையாய் கதைக்கிறாய் காரிகையின்கரத்தில்
முத்தமழை
மின்னொளின் மத்தாப்பில் மணல்தரையை முத்தமழையால் மூழ்கடிக்கிறாய்
நீலமேகம்
நீலமேகம் நிறமாறி நீர்த்துளியால் நிறைக்கிறாய் நீலவண்ணகடலை
இசை
இயற்கையின் இசையில் இதமான இன்பதூறலில் இதயத்தைநனைக்கிறாய்
காற்றோடுமழை
கடந்துசெல்லும் காரிகையின் காட்டன்சேலையை களைக்கவே காற்றோடுமழைபொழிகிறாய்.