காதல் ஹைக்கூ கவிதைகள்
அவள் நடக்கிறாள்

புற்கள் பூரித்தது பூக்கள் புன்னகைத்து
பூமி வெட்கம் கொண்டு வெப்பம் கண்டது
அவள் நடக்கிறாள்
அவன் தேகம்

காணும் போதே மோகம் கண்கள் அங்கே மேயும்
தேடிக் கிடைத்த முத்து எனக்கு மட்டும் சொத்து
அவன் தேகம்
காதலில் விழுந்தேன்

கனவுகள் காண்கிறேன் கண்மூடி விழிக்கிறேன்
தோழியை மறக்கிறேன் தொலைந்து போகிறேன்
காதலில் விழுந்தேன்
மீண்டும் சந்தித்தோம்

இடி இடித்து புயல் அடித்து பூமி அதிர்ந்தது
கடலின் கர்சனையும் காற்றின் வேகமும் காலத்தால் கடந்தது
மீண்டும் சந்தித்தோம்
உன் தேகம்

வார்த்த கோப்பையில் நீர்த்த போதையடி
பார்த்த மாத்திரத்தில் வேட்கை மூட்டுதடி
உன் தேகம்