ஒரு வரி காதல் தோழன் கவிதைகள்
காதலனே
கவிதைமொழியில் கதைத்து காதலோடு கரம்ப்பற்றும் காதலனே.
அன்பானவனே
அன்பென்னும் அகராதியால் அரவணைத்து அடிமைப்படுத்தும் அன்பானவனே.
காதல்கொள்வேன்
காலங்கள் கடந்தாலும் காத்திருப்பிலே காதல்கொள்வேன் காதலனே.
கரியசிகை
கர்வம்கொண்டு கதைக்கிறது காரிகன் கரம்கோதும் கரியசிகை.
இதயமானவன்
இதயத்தை இருப்பிடமாக்கி இதமாய் இனிக்கிறான் இதயமானவன்.