ஒரு வரி காதல் கவிதைகள் – 2
கூந்தல்
காற்றில் கலைந்த கூந்தலில் காந்தையின் கந்தர்வம்
அன்பு
ஆசையும் அன்பும் அடங்காமல் அவனிடம் அடிமையானேன்
கண்கள்
கலைமகள் கண்கள் காதல் காவியம் கதைப்பதேனோ
என்னவன்
எதுவானாலும் என்னவன் எனக்கானவன் என எண்ணினேன்
வலம்
வனிதை வலம் வர வானமும் வண்ணமானதே